Breaking News

பூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு !

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதிவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இவர்கள் இருவரும் இன்று மன்றில் ஆஜராகினர். அவர்களிடம் மீண்டும் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.