Breaking News

பூஜித்த – ஹேமசிறி மீண்டும் கைதாகும் சூழ்நிலை – நீதிமன்று உத்தரவு !

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ,பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய பிணை அனுமதியை இரத்துச் செய்துள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம்.

இதனால் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிந்தி கிடைத்த செய்திகளின்படி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறியமுடிந்தது.