Breaking News

பூஜித்த – ஹேமசிறிக்கு விளக்கமறியல் !

 

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் நீதவான் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த போதும் கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த பிணை உத்தரவை இன்று ரத்து செய்திருந்தது.

இதனையடுத்து அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.