உலகம்

புளோரிடா துப்பாக்கிச் சூடு; அமெரிக்க – சவுதி உறவில் விரிசல் !அமெரிக்காவின் சவுதி அரேபிய பயிற்சி மாணவராக இருந்த மொஹமட் அல் சம்ரானி நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் நான்கு பேர் பலியான நிலையில் சவுதி அரேபிய இராணுவபயிற்சி மாணவர்கள் விமான பயிற்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சவுதி  அரேபிய இராணுவ மாணவர்களுக்கு வகுப்பறை கல்வி மட்டும் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

புளோரிடா கடற்படை தளத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் என அமெரிக்க புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த சவுதி அரேபிய இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்இ நான்கு பேர் உயிரிழந்ததோடுஇ எட்டு பேர் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்திய சவுதி அரேபிய வீரரும்இ அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா என்ற இடத்தில், அமைந்துள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் பயிற்சி பெற்றுவருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரணுவ வீரர் மொஹமட் அல் சம்ரானியும் கடந்த மூன்று வருடங்களாக பயிற்சிப்பெற்று வந்தவராவhரார்.

அந்த முகாமில் பயிற்சிப்பெற்று வரும் ஏனைய சவுதி வீரர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.