இலங்கை

புர்க்கா மற்றும் நிக்காப்களுக்கு தடைவிதித்தது அரநாயக்க பிரதேச சபை !

 

 

புர்க்கா மற்றும் நிக்காப்களுக்கு தடைவிதித்து அரநாயக்க பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

பொதுஜன பெரமுன உறுப்பினர் சுரவீர கொண்டு வந்த தீர்மானத்தை மற்றுமொரு உறுப்பினரான ரிபாய் வழிமொழிந்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இனி அரநாயக்க பகுதியில் முஸ்லிம் பெண்கள் புர்க்கா மற்றும் நிக்காப் அணியவேண்டாமென சபை வலியுறுத்தியது.

சபை அதன் தலைவர் நிஹால் செனெவிரத்னவின் (ஐ.தே .க )தலைமையில் இன்று கூடியபோது தீர்மானம் நிறைவேறியது