உலகம்

புர்கினோ பாசோவில் தாக்குதல் 37 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் சுரங்க நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதோடு, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை, நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்க நிறுவனம் ஒன்றில் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

கடந்த 15 மாதங்களில் புர்கினோ பாசோவில் நடத்தப்பட்ட மூன்றாவது மோசமான தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்கினா பாசோவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இஸ்லாமியப் ஆயுதாரகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது சுரங்கப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், பிரதேசத்தில் பதற்ற நிலைமைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது