உலகம்

புத்தாண்டில் வாட்ஸப் மூலம் 10 ஆயிரம் கோடி, ‘மெசேஜ்’

 

புத்தாண்டு தினமன்று வாட்ஸப் செயலி மூலம், 10 ஆயிரம் கோடி செய்திகள், தகவல்கள், படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது இதுவரை இல்லாத மிகப் பெரிய சாதனை என வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், ‘பேஸ்புக்’ நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸப் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த செயலியை, புத்தாண்டு அன்று, உலக மக்கள் பயன்படுத்தி, 10 ஆயிரம் கோடி செய்திகளை பகிர்ந்துள்ளனர்.இதுவரை, ஒரே நாளில் பகிரப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தகவல்கள், வாட்ஸப் மூலமே பகிரப்பட்டுள்ளது என்பதும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது.