இலங்கை

“புத்தரின் பாதை புரியாத பிக்குகள்” – அமைச்சர் மங்கள சாட்டை

 

“தம்மை கொல்ல வந்த தேவதத்தருக்கு கூட விகாரையை தடை செய்யவில்லை புத்த பெருமான்.அந்த உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும்.கவலையில் இருந்து நீங்கட்டும்”

இவ்வாறு குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.

கம்பஹா மாவட்ட விகாரை நிகழ்வுகளில் அமைச்சர்களான ராஜித, மங்கள மற்றும் சதுர சேனாரத்ன எம்பி ஆகியோர் கலந்து கொள்ள கூடாதென கம்பஹா மாவட்ட சங்க சபை தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.