இலங்கை

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை – இந்திய அமைச்சர் அறிவிப்பு !

 

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருதை தந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள், ரசாயனத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை கோயில் இணை ஆணையர் ந. நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோயில் வாயிலில் செய்தியாளர்களிடம் மாண்டியா கூறியது:

இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷண்ணன் உடனிருந்தார்.