புதுக்குடியிருப்பு நபருக்கு புதுவகை கொரோனா தொற்றா..? வெளியான அதிர்ச்சி தகவல்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருக்கு தொற்றியுள்ள வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவல் நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தால், உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பினை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.