விளையாட்டு

புதிய வீரர்கள் களமிறக்கப்படுவதால் வெற்றிகளைப் பெற முடியவில்லை

புதிய வீரர்கள் களமிறக்கப்படுவதோடு, முக்கியமான வீரர்கள் விளையாடாததால், இருபதுக்கு-20 போட்டியில் வெற்றிபெறுவது கடினமாக இருப்பதாக, இந்திய (இருபதுக்கு-20) அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

‘ஏனைய போட்டிகளில், ஒட்டுமொத்த அணியும் விளையாடுகிறது. அப்போது அணியிடமிருந்து என்ன பெற வேண்டுமோ அது பெறப்பட்டு விடுகிறது. இந்த ஒரு வடிவத்தில்தான் பிற வீரர்களை களமிறக்கி பரிசோதனை முயற்சிகளை செய்ய முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

‘இருபதுக்கு-20 போட்டியில்தான், புதிய வீரர்கள் தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியும் இதிலிருந்து அவர்கள் ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கூட தயாராகலாம்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அதற்காக போட்டிகளில் வெற்றிபெறக் கூடாது என்பதல்ல அர்த்தம், வெற்றிக்குத்தான் முன்னுரிமை, ஆனால் இந்த புதிய வீரர்கள் இதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.