உலகம்

புதிய விசாரணைக்கு நியூசிலாந்து பிரதமர் உத்தரவு

 

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ஜெசிந்தா.

அரச பாதுகாப்புத்துறை மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு இப்படியான தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருக்க முடியாமற் போனது ஏன் என்பது பற்றி பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் வந்த நிலையில் பிரதமர் இந்த விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்து முழுக் கண்காணிப்பில் இருந்தாலும் இப்படியான கேள்விகளுக்கு பதில் வழங்கியேயாக வேண்டுமென தெரிவித்துள்ள பிரதமர் இதன்மூலம் பாதுகாப்புத் துறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.