இலங்கை

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே நேரம் பதிற் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.