இலங்கை

புதிய பிரதம நீதியரசர் புவனேக்க ?

புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக்க அலுவிஹாரே நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நீதியரசர் நளின் டி சில்வா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார்.

அதனையொட்டி வரும் 5 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் காலை 9.45 ற்கு பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை வழங்கும் சம்பிரதாயபூர்வ அமர்வு நடைபெறவுள்ளது.

இப்போதைய நிலைவரப்படி உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நீதியரசர் புவனேக்க அலுவிஹாரே முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே சேவை மூப்பு அடிப்படையில் பிரதம நீதியரசரை நியமித்த ஜனாதிபதி இம்முறையும் அதன் அடிப்படையில் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக உயர்மட்ட தகவல்கள் சொல்கின்றன.

ஜனாதிபதி புதிய பிரதம நீதியரசரை தேர்வு செய்து அரசியலமைப்பு கவுன்சிலுக்கு அங்கீகாரத்திற்கு அனுப்பும் நடவடிக்கை விரைவில் நடைபெறுமென அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டன .