இலங்கை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகிறார் ஜனாதிபதி மைத்ரி !

அரசியலில் அதிரடி தீர்மானங்களை எடுத்துவரும் ஜனாதிபதி மைத்ரி புதிய அதிரடி அரசியல் நகர்வொன்றை முன்னெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதன்படி வெற்றிடமாகவுள்ள பிரதம நீதியரசர் பதவிக்கு சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அவர் ஆலோசித்துள்ளதாக தகவல்.

உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களாக இருக்கும் புவனேக்க அலுவிஹாரே – பிரியந்த ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் இதற்காக பரிசீலனையில் இருந்தாலும் இப்போதைய சட்ட மா அதிபரின் பெயரே முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த அரசியலமைப்பு நெருக்கடி நிலைமை ஏற்பட்டபோது சட்ட மா அதிபர் – ஜனாதிபதி தரப்பின் நியாயங்களை முன்னின்று எடுத்துக் கூறியவர் என்பதால் அவர் மீது ஜனாதிபதி கூடுதல் விருப்பு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வியாக்கியானம் !

புதிய நீதியரசர் பதவியேற்ற கையோடு உயர்நீதிமன்றத்திடம் தமது பதவிக்காலம் எப்போது முடியும் என்று அபிப்பிராயம் கேட்காமல் – 19 ஆவது திருத்தம் எப்போது அமுலுக்கு வரும் என்பதை வினவவுள்ளார் மைத்ரி.

19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் வரையறுக்கப்பட்டாலும் அது அடுத்துவரும் ஜனாதிபதியின் பதவிக்கலாமா இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக்கலாமா என்பது தெளிவாக குறிப்பிடப்படாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் மக்கள் வாக்குகளில் தெரிவான மைத்ரி முதலில் செய்த சத்தியப்பிரமாணப்படி அவரது பதவிக்காலம் அடுத்த வருடமே முடிவடைய வேண்டும்.
அப்படியான காலம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறினால் நான்கரை வருடம் முடிந்த கையோடு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லவும் – அதேபோல் ஜனாதிபதித் தேர்தலையும் அதே தினத்தில் நடத்தவும் மைத்ரி ஆலோசித்து வருவதாக தகவல்.

இப்படி செய்வதன் மூலம் மீண்டும் தாமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் – பிரதமர் வேட்பாளர் பதவியை மஹிந்த அணிக்கு வழங்கவும் உத்தேசித்துள்ளார் ஜனாதிபதி..

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்னால் – பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டும்- அந்த நீதியரசர் அமைக்கும் பென்ச் சரியான வியாக்கியானத்தை வழங்க வேண்டும்.

எப்படியென்றாலும் தனக்கு சாதகமான முடிவு வருமென்றே கருதும் மைத்ரி அதற்கேற்ப அரசியல் காய்களை இப்போது நடத்தி வருவதாக தகவல்.