இலங்கை

புதிய தகவல்கள் !

 

நேற்று நவகமுவவில் மீட்கப்பட்ட சடலம் கொண்டே சமில எனப்படும் ஒருவரினதென அடையாளம் காணப்பட்டுள்ளது…

இவர் டுபாயில் மதுஸுடன் கைது செய்யப்பட்டுள்ள கெசெல்வத்த திணுக்கவின் வலது கை என்கிறது பொலிஸ் …

ஏற்கனவே இவர் மாக்கொல வர்த்தகர் மன்னாவை சுட்டுக் கொன்றவர் என சொல்லப்படுகிறது..

நேற்று மொறட்டுவையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஒரு சிடிஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.அது மதுஷின் தந்தையின் இறுதிக்கிரியையின் போது எடுக்கப்பட்டது.

அதனை இப்போது பார்வையிடும் சி ஐ டி அந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் மற்றும் மதுஷின் சகாக்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது…