Breaking News

புதிய கணக்காளர் நாயகமாக சூலா

புதிய கணக்காளர் நாயகமாக சூலா விக்ரமரத்ன நியமிக்கப்படலாமென அறியமுடிகின்றது.

தற்போதைய கணக்காளர் நாயகம் காமினி விஜேசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி முடிவடைகிறது.

இதனையடுத்து சுமார் 28 வருட கால சேவை அனுபவத்தை கொண்டுள்ள சூலாவை அந்த பதவிக்காக நியமிக்கவும் அவரின் பெயரை அங்கீகாரத்திற்காக அரசியலமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.