இலங்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் கூறியுள்ளார்.

இதன்போது, மேலும் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உறுதியான அதிகாரம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச ஒப்பந்தங்களை உடனடியாக நிராகரிக்க முடியாது என்றும் அது குறித்து ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.