இலங்கை

புதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.

 

புதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.

தேசிய நீர்வாழ் உயரின வள ஆராய்ச்சி நிறுவனத்தினால்(NARA) புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மீன் உணவு உற்பத்திப் பிரிவின் ஆரம்ப நிகழ்விற்கான முதலாவது அழைப்பிதழை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக பெற்றுக் கொண்டார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்திற்கு இன்று (24.01.2020) வருகை தந்த தேசிய நீர்வாழ் உயிரின வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளினால் குறித்த நிகழ்விற்கான அழைப்பிதழ் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இல.2 ரஜமாவத்தை எக்கலை,ஜா – எல எனும் முகவரியில் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த மீன் உணவு தயாரிப்பு பிரிவின் ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் மற்றம் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் மற்றும் நன்னீர் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோருடன் அமைச்சின்; செயலாளர் உட்பட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய நீர்வாழ் உயிரின வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ‘சிறந்த உணவு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊடாக கடல் வளத்தை முன்னேற்றுதுல்’ என்றும் திட்டத்தின் அடிப்படையில் மீனின் கழிவுகளைப் பயன்படுத்தி தரமான மீன் உணவுகளை தயாரிக்கும் எதிர்பார்ப்போடு குறித்த மீன் உணவு உற்பத்தி பிரிவு ஆரம்பிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.