உலகம்

புகைப்படக்கலைஞர் பீட்டர் லிண்ட்பெர்க் காலமானார்

நவீன ஆடையலங்கார புகைப்படக்கலைஞர் பீட்டர் லிண்ட்பெர்க்,  தனது 74ஆவது வயதில் காலமானார்.

கறுப்பு, வெள்ளை உருவப்படங்களை எடுப்பதில் மிகப்பிரபலமான இவர், இன்று காலமானார்.

ஜேர்மன் புகைப்படக் கலைஞர்   லிண்ட்பெர்க்கின் இறப்பு குறித்த செய்தி, அவரது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

1944ஆம் ஆண்டு பிறந்த லிண்ட்பெர்க், தனது வாழ்க்கை முழுவதும் பல நவீன ஆடையலங்கார வடிவமைப்பாளர்களுடனும், சர்வதேச ரீதியில் மிகப்பிரபலமான பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

1990களில், நவோமி காம்பெல் மற்றும் சிண்டி கிராபோர்ட் ஆகிய பிரபலங்களை பீட்டர் லிண்ட்பெர்க்,  எடுத்த புகைப்படங்கள் அவரை பிரபலமாக்கியமை குறிப்பிடத்தக்கது.