உலகம்

புகழ்பெற்ற கலங்கரை விளக்கம் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டது  டென்மார்க்கில் 720 தொன், எடைகொண்ட 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றை 70 மீற்றர் தூரத்துக்கு நகர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.

ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் இருக்கும் ‘ரப்ஜெர்க் நியூட்’ என அழைக்கப்படும் குறித்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

கடலரிப்பு காரணமாக இந்த கலங்கரை விளக்கம் மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு உள்ளானது.

இந்நிலையில் 5 மில்லியன் குரோணர் செலவில் அதனை பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க முடிவு தீர்மானிக்கப்பட்டது.

கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு இரசித்தனர்.

கலங்கரை விளக்கம் 1,000 தொன் வரை எடையை கொண்டதாக காணப்படும்  பொறியாளர்கள் கருதினர், எனினும் நகர்த்தி உயர்த்தியபோது அது வெறும் 720 தொன் என கண்டுபிடித்தனர்.