உலகம்

பிளாஸ்ரிக் உணவு – இறந்த திமிங்கிலம்

 

பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

.அதன் வயிற்றுக்குள் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். பிளாஸ்ரிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கிலம் நோயினால் இறந்தமை தெரியவந்துள்ளது ,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.