உலகம்

பிளவுகளுடன் சந்தித்த ஐரோப்பிய தலைவர்கள்

 

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ப்ரசல்ஸில் நடைபெற்றது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் முக்கிய பதவிகளுக்கான போட்டியால், பலருக்கு இடையில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்றையதினம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவிக்கும் என்றும் ஆட்கள் தெரிவு செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக நேற்று முன்வைக்கப்பட்ட பரிந்துரை நிராகரிக்கப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.

மீண்டும் விரைவில் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.