உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஐந்து பேர் பலிதெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தினால், மண்சரிவு மற்றும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 7:30 மணியளவில், வடக்கு கோட்டாபடோ மற்றும் அருகிலுள்ள மாகாணங்களில்  நிலநடுக்கம் ஏற்பட்ட தாக பிலிப்பைன்ஸ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று அதிகாலை 5 மணியளவில், டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

டவோ டெல் சுரில் அமைந்துள்ள மாக்சேசே நகரில், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, இரண்டு வயது சிறுமி தூக்கத்தில் இருந்த நிலையில் பொருட்கள் அவர் மீது விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.

அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிப்பினை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ் உலகின் மிகவும் பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாகக பதிவாகியுள்ளது.

1990இல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 2,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.