உலகம்

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிக்கும் அபாயம்  பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு எரிமலை, எந்த சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதறலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இன்று அதிகாலையில், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ‘தால்’ எரிமலையிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.

இதனால் பிரதேசத்தில் இருந்து சுமார் 8,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குளத்திற்கு, நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ள  உலகின் மிகச்சிறிய எரிமலைகளில் ஒன்றாகவும், பிலிப்பைன்ஸின் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையாகவும் “தால்” கருதப்படுகின்றது.

கடந்த 450 வருடங்களில் குறைந்தது 34 தடவைகள் குறித்த எரிமலை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.