உலகம்

பிரேசில் மழைக்கு 37 பேர் பலிதென்கிழக்கு பிரேசிலில் பெய்துவரும் கடும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையால், முக்கியமாக தலைநகர் பெலோ ஹொரிசொன்ட் மற்றும் பெருநகரப் பகுதிகளிலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்இ 13இ687 பேர் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, 3,354 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆளுநர் ரோமு ஜீமா வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

பெலோ ஹொரிசொன்டேயில் கடந்த 24 மணி நேரத்தில் 171.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 110 ஆண்டுகளில் பிரேசிலில் பெய்த அதிக மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது.