உலகம்

பிரேசில் சிறை மோதலில் பலர் பலி

வடக்கு பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் குறைந்த பட்சம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மானோஸில் உள்ள அனிசியோ ஜொபிம் சிறைச்சாலையில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில் நேற்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
கைதிகளின் உறவினர்கள் முன்னாலேயே சிலர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிறைச்சாலையில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.