உலகம்

பிரேசிலில் சாம்பலில் இருந்து வெளிவரும் பொக்கிசங்கள்

200 வருடங்கள் பழையான பிரேசிலின் தேசிய நூதனசாலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீப்பரவல் ஏற்பட்டது.
இதில் சுமார் 20 மில்லியன் பழைமையான தொல்பொருட்கள் அழிவடைந்தன.
அவற்றின் பெரும்பாலானவை மீள பிரதீடு செய்ய முடியாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று 8 மாதங்களின் பின்னர் அதிகப்படியாக தொல்பொருட்கள் கட்டிட சாம்பலுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் மீண்டும் பாரிய நூதனசாலை ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.