உலகம்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி விடுதலை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 18 மாத சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இடதுசாரியான, முன்னாள் தலைவர் லூலா நேற்று மாலை சிறையிலிருந்து வெளியேறும்போது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பளித்தனர்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குரிடிபா நகரில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

மேன்முறையீட்டு சிக்கல்களை தீர்த்துக் கொண்டால் மாத்திரமே, பிரதிவாதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென, அந்நாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2003 மற்றும் 2010 க்கு இடையில் பிரேசிலை வழிநடத்திய 74 வயதான முன்னாள் ஜனாதிபதி நாட்டில் ஒரு இடதுசாரி அடையாளமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.