உலகம்

‘பிரெக்ஸிட்’ காலக்கெடுவை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி அதற்கு மகாராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.

இதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடம் பிரதமர் தெரசா மே கோரிக்கை வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அனைவரும் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை ஒக்டோபர் ம 31-ந் தேதி வரை நீடிக்க ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.