விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி- நிறைவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் மைதானத்தில் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மார்னஸ் லெபுஸ்சாக்னே 108 ஓட்டங்களையும் மெத்திவ் வேட் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.