உலகம்

பிரித்தானிய புதிய பிரதமர் யார்? இன்று தெரியும்.

 

பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார்? என்று இன்றையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

பொரிஸ் ஜொன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் ஆகியோரில் ஒருவர் இன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் புதிய பிரதராகவும் அறிவிக்கப்படவுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் பேராளர்கள் மத்தியில் கடந்த தினங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது.

இன்று தெரிவு செய்யப்படவுள்ள பிரதமர், நாளை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பார்.

ப்ரெக்சிட் விடயத்தில் ஏற்பட்ட தோல்வியால் தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.