உலகம்

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான பந்தயம் – பெறுபேறு விரைவில்

 

பிரித்தானிய பிரதமர் பதவிக்காகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்காகவும் ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின் பெறுபேறு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக்கப்படவுள்ளது.

குறைந்த பட்சம் 33 வாக்குகளைப் பெறாதவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்.

எஞ்சியோருக்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி இரண்டு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வரும் 22ம் திகதி முதல் கன்சர்வேட்டிவ் பேராளர்கள் மத்தியில் அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதில் வெற்றிப் பெறுகின்றவர் நாட்டின் புதிய பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்படுவார்.

இந்தமுறை போரிஸ் ஜோன்சனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.