உலகம்

பிரித்தானிய எண்ணெய் கப்பலை தடுத்த ஈரானிய படகுகள்

 

ஈரானிய படகுகள் ஓமான் வளைகுடாவுக்கு அருகே ஒரு பிரித்தானிய எண்ணெய் கப்பலை தடுக்க முயன்றுள்ளன.

இந்த படகுகள் பிரித்தானிய கடற்படைக் கப்பலால் எச்சரித்து விரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானைய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஈரானியர்களின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் விவரித்தார்.

ஈரான் தமது எண்ணெய் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதற்கு பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தி இருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய சம்பவம் பதிவானது.

இந்த படகுகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படைக்கு (ஐ.ஆர்.ஜி.சி) சொந்தமானது என்று நம்பப்படுகிறது.