விளையாட்டு

பிரான்ஸ் வைத்தியசாலையில் பீலே

பிரேசிலின் நட்சத்திர உதைபந்தாட்ட வீரர் பீலே சிறுநீரகத் தொற்று காரணமாக பிரான்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள பிரான்ஸ் வந்திருந்த பீலே திடீரென இந்த தொற்றுக்கு ஆளானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் இரண்டு தினங்களில் வீடு திரும்புவாரென மருத்துவமனை தகவல்கள் சொல்கின்றன.

அண்மைக்காலமாக சுகாதார பிரச்சினைகளுக்கு பீலே முகம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.