உலகம்

பிரான்ஸ் தீயால் தேவாலயத்தின் முக்கிய உட்கட்டமைப்புக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி மெக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸ் Notre dam தேவாலயத்தின் பிரதான உட்கட்டமைப்புக்கு எந்த சேதங்களும் ஏற்படவில்லையென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ புராதன சின்னங்களில் ஒன்றான இந்த தேவாலயம் உலகப் போர்களின் போது கூட எந்த பாதிப்புக்களையும் சந்திக்கவில்லை.

பிரான்ஸ் கோடீஸ்வரர் பினோல்ட் தேவாலய புனரமைப்பு பணிகளுக்கு 100 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளார். இந்த தேவாலயம் ஐரோப்பிய கலாசாரத்தின் சின்னமென ஜெர்மன் அதிபர் அஞ்செலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.