Breaking News

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரசித்தி பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ. தீயணைப்பு படை விரைந்தது !

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரசித்தி பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ. தீயணைப்பு படை விரைந்தது !

13 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான இந்த தேவாலயத்தை பார்வையிட வருடந்தோறும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பல இடங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

இதன் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த சமயம் ஏற்பட்டுள்ள தீ விபத்து நாசகார வேலையா என்பது பற்றி விசாரிக்கப்படுகிறது.

தீயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன .

மிக மோசமான தீ விபத்து இதுவென நகர மேயர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தையடுத்து உடனடி நடவடிக்கைகளில் இறங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றவிருந்த உரையை ரத்துச் செய்தார்