உலகம்

பிரான்ஸில் வேலை நிறுத்தத்ததால் 200 மில்லியன் யூரோ இழப்பு

 

கடந்த டிசம்பர் மாதம் முதல் பிரான்சில் நடத்தபட்டுவரும் போக்குவரத்துறை வேலை நிறுத்தத்தால் தனது நிறுவனத்துக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பரிஸ் நகர நிலக்கீழ் ரயில்சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத இறுதிவரை மட்டும் 200 மில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல ஜனவரி மாத்தின் இழப்பு விபரங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு வருடத்தின் நான்கில் ஒரு பங்கு வருவாயை போக்குவரத்துறை வேலை நிறுத்தம் காரணமாக தமது நிறுவனம் இழந்திருந்தாலும் இந்த நிதியிழப்பை சரி செய்ய இந்த ஆண்டில் 2 பில்லியன் யூரோக்களை முதலிட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு மாதங்களாக தொடரும் பொது போக்குவரத்து வேலை நிறுத்தம் நாளையுடன் முடிவுக்குக கொண்டுவரப்படலாம் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் போக்குவரத்து வேலைநிறுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவடையும் என ஊழியர்கள் அறிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.