இலங்கை

பிரான்ஸில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம் !

 

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றது .

தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் இம் முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இடம்பெற்றன.

பிரான்ஸ் பாரிஸ் நகரில் ஒன்று கூடிய ஈழத்தமிழர்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.