Breaking News

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை

 

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.

34 வயதான சுஷாந்த், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தியில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார்.

நடிகரின் தற்கொலை செய்தி இந்தியத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் நீண்ட நாள் தனிமையாக இருந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவில் இருந்தாரென சொல்லப்பட்டது.