உலகம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல்-சாப்போவின் மனைவி கைது

மெக்சிக்கோவை சேர்ந்த, பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மனைவி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகின் மிகப் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்று சினோலா கார்ட்டெல். இதன் தலைவன் எல்-சாப்போ,

கடந்த 25 ஆண்டுகளில் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை மலை மலையாக அமெரிக்காவுக்கு இவர் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்-சாப்போ தற்போது கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் எல்சாப்போவின் மனைவி எம்மா அய்ஸ்ப்ரோ (Emma Coronel Aispuro) விர்ஜீனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.