பிரபல தென்னிந்திய நடிகருக்கு கொரோனா தொற்று
தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராம்சரண், ”எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். ராம்சரண் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.