உலகம்

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் பொரிஸ் ஜோன்சன்

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில், முதற்கட்ட வாக்கெடுப்பில், முன்னாள் வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சன் முதலிடம் பெற்றுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றில் நடந்த இரகசிய வாக்கெடுப்பில்அவர் 114 வாக்குகளைப் பெற்றார்.

வெளிவிவகார செயலாளர் ஜெரமி ஹன்ட் 43 வாக்குகளையும் மைக்கல் கோவ் 37 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த பதவிக்காக 10 வேட்பாளர்கள் முன்னிலையாகிய நிலையில் வாக்கெடுப்பின் பின்னர் 3 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அடுத்தக்கட்ட வாக்கெடுப்பு அடுத்தவாரம் நடைபெறும்.