Breaking News

பிரதமர் உடனான அவசர சந்திப்பை இறுதி நேரத்தில் ரத்து செய்தார் மைத்திரி

 

ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் நேற்று இரவு சந்திப்பதாக இருந்த போதும், அந்த சந்திப்பு இறுதிநேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் குழு ஒன்று ஜனாதிபதியை சந்திப்பதற்கு இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் ஜனாதிபதி கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை ரத்து செய்யும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு கோரப்பட்டது.

எனினும் சந்திப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில் அந்த சந்திப்பை ஜனாதிபதி ரத்து செய்ததாக கூறப்படுகிறது.