Breaking News

பிரதமரை நுவரெலியாவில் சந்தித்தார் இந்தியத் தூதுவர் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று மாலை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுக்காக சென்று பிரதமர் தங்கியுள்ள பிரதமர் ஓய்வு விடுதியில் நடந்த இந்த சந்திப்பில் இந்திய தேர்தல் நிலவரங்கள் உட்பட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன .

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்ரி நாளை திருப்பதி செல்லவுள்ளாரென சொல்லப்படுகிறது

(கோப்புப் படம் )