Breaking News

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த !

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் மஹிந்த ராஜபக்ச.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளார்.பிரதமர் கடமையேற்கும் நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறுமென தெரிகிறது.