Breaking News

பாரிஸ் தீ – கண்ணீர் விட்டழுத மக்கள் !

பாரிஸ் நகரின் நொற்ற டேம் தேவாலய தீ விபத்து குறித்து முழு அளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரான்ஸ் ஜனாதிபதி கவலையுடன் காணப்பட்டார். “ பிரான்ஸ் மக்களின் துயரமான இந்த தருணத்தில் அவர்களின் உணர்வுகளுடன் ஒன்றுபட்டு நிற்பதாக” அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியுடன் நகர மேயர் Anne Hidalgo,பிரதமர் Edouard Philippe மற்றும் முதற்பெண்மணி Brigitte Macron ஆகியோரும் வந்திருந்தனர்..

தேவாலயம் எரிவதை கண்டு பலர் அழுதனர் . அதன் தொன்மைமிக்க கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் கவலை வெளியிட்டனர்.இந்த தேவாலயம் இல்லாத பாரிஸ் நகரை நினைத்துப் பார்க்க முடியவில்லையென மக்கள் கவலை வெளியிட்டனர்