Breaking News

பாராளுமன்ற செய்திகள் !

 

சித்தார்த்தன் எம் பி

“ 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை இன்று முஸ்லிம் மக்களும் உணர்ந்திருப்பார்கள். இனிமேலாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.யாழ் மாணவர்களின் கைதை ஏற்க முடியாது ”

செல்வம் அடைக்கலநாதன் எம் பி

“ எமது போராட்டம் வேறு தீவிரவாதம் வேறு என்பதை இன்று எதிர்க்கட்சித் தரப்பில் உணரப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.தாக்குதல் காரணமாக உயிரந்தவர்களுக்கு அஞ்சலிகள். எமது இயக்க தலைவர் சிறி சபாரெத்தினத்தின் கொலை நடந்த மாதம் என்பதால் அவருக்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்

“ நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின்போது அமைதியை ஏற்படுத்த பாடுபட்ட பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும். தாக்குதல்தாரிகள் நுவரெலியாவில் இருந்தபோது தான் அங்கு பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருந்தனர். நிலைமை அப்படி இருந்துள்ளது.அப்படியான நிலையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.