இலங்கை

பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 2084 முறைப்பாடுகள் பதிவு

பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த ஆணைக்குழு, நேற்று (07) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதுவரை ஒரேயொரு வன்முறைச் சம்பவமே பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.