உலகம்

பாபிலோன்- யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிப்பு

பண்டைய நகரமான பாபிலோன், ஈராக்கின் பல தசாப்த கால பரப்புரைகளைத் தொடர்ந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அசர்பைஜானின் தலைநகரான பாகுவில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

யூப்ரடீஸ் நதியில் உள்ள பண்டைய மெசொப்பொத்தேமிய நாகரிகத்தின் தொட்டில் என்று பாபிலோன் அழைக்கப்படுகிறது.

இது, ஒரு நாட்டின் எல்லைக்குள் உள்ள ஆறாவது உலக பாரம்பரிய தளமாக மாறியுள்ளது.